கோவையில் கடந்த 1997ம் ஆண்டு ஏற்பட்ட கலவரம்.. போலீஸ்காரர் கொல்லப்பட்ட தினத்தை முன்னிட்டு தீவிர பாதுகாப்பு

published 2 years ago

கோவையில் கடந்த 1997ம் ஆண்டு ஏற்பட்ட கலவரம்.. போலீஸ்காரர் கொல்லப்பட்ட தினத்தை முன்னிட்டு தீவிர பாதுகாப்பு

கோவை: கோவை உக்கடம் போலீஸ் நிலையத்தில் காவலராக பணியாற்றியவர் செல்வராஜ். இவர் கடந்த 1997ம் ஆண்டு இதே நாளில் உக்கடம் பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த 3 பேரை தடுத்து நிறுத்தி போக்குவரத்து விதிமீறியதாக அபராதம் விதித்தார்.

அப்போது காவலர் செல்வராஜுக்கும், 3 வாலிபர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் 3 பேரும் அங்கிருந்து சென்று விட்டனர். சிறிது நேரத்தில் சிலரை கூட்டி வந்த அவர்கள் நடுரோட்டில் வைத்து காவலர் செல்வராஜை வெட்டி கொன்றனர். இது மதக்கலவரமாக மாறியது. தொடர்ந்து பஸ் எரிப்பு, கடைகள் சூறையாடப்பட்டன.

வன்முறையை அடக்க மறுநாள் போலீசார் நடத்திய துப்பாக்கி சூடு மற்றும் கலவரத்தில் 19 பேர் கொல்லப்பட்டனர். இதனை தொடர்ந்தே 1998ம் ஆண்டு நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பில் 58 பேர் கொல்லப்பட்டனர்.

200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், காவலர் செல்வராஜ் கொல்லப்பட்ட தினம் இன்றும், 19 பேர் கொல்லப்பட்ட தினம் நாளையும், டிச.6 பாபர் மசூதி இடிப்பு தினம் வருவதால் கோவை மாநகரில் இன்று போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

உக்கடம், கோட்டைமேடு, டவுன்ஹால் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். பேருந்துநிலையம், கோயில்கள் போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டனர். தீவிர வாகன சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த பாதுகாப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe